உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்!

ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்!

பொங்கலூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, படியூர் சி.பி.எஸ்., அவென்யூ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 8ம் தேதி, மாலை 4:00க்கு, படியூர் மாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்கலச ஊர்வலம் நடைபெற்றது. இரவு 7:30க்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால வேள்வி உள்ளிட்டவை நடைபெற்றன.நேற்று அதிகாலை 4:00க்கு, 2ம்கால யாக பூஜை, துவார பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. காலை 7:00க்கு, ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 8:00க்கு தச தரிசனம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !