திருப்புல்லாணி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்!
ADDED :3869 days ago
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, மார்ச் 26 ல், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 29 ல் இரட்டை கருட சேவையும், 31 ல் திருக்கல்யாணமும், ஏப்., 3 ல் தேரோட்டமும், 4 ல் தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் மகேந்திரன், தேவஸ்தான அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.