விழுப்புரம் பூவரசன்குப்பம் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்!
ADDED :3865 days ago
விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி சிறப்பு ஹோமம் நடந்தது.விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி உற்சவத்தையொட்டி,நேற்று காலை 7 மணிமுதல் 8 மணிக்குள்மூலவருக்குசிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 9:00மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது.
காலை 9:30 மணிக்கு பஞ்ச தீர்த்த ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வன்திரி ஹோமம், வசுத்தராஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், பகல்12:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. மதியம் 1:00மணிக்கு கும்பம் புறப்பாடாகி, மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், பக்தர்களுக்குபிரசாத விநியோகம் செய்தனர்.