உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா!

விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா!

தர்மபுரி: தர்மபுரி, சாலை விநாயகர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி நடந்தது. இதையொட்டி 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. பூஜையின் நிறைவு நாளான நேற்று காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு, 108 சங்கு பூஜையும், 11 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.விழாக்குழுவின் சார்பில், பக்தர்களுக்கு காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவசுப்பிரமணியன், திருப்பணி குழுவை சேர்ந்த சம்பத்குமார், கருணாகரன், ஸ்ரீகாந்த், குணசேகர், சிவராஜ், கண்ணன், கேசவன், சந்திரசேகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !