உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ அரவிந்தர் புனித சின்னம் பிரதிஷ்டை

ஸ்ரீ அரவிந்தர் புனித சின்னம் பிரதிஷ்டை

சேலம்:ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், புதுச்சேரியில் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தின் கிளைகள், சென்னை, கடலூர், சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ளது. சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள அரவிந்தர் ஆஸ்ரமத்தில், பகவான் ஸ்ரீ அரவிந்தரின் உடல் பாகங்களில் சிலவற்றை எடுத்து வந்து, பிரதிஷ்டை செய்யப்படுகிறது.புனித சின்னங்கள் என கூறப்படும், அவற்றை புதுச்சேரியில் இருந்து எடுத்து வருகின்றனர். வரும், 14ம் தேதி, மாலை, 4 மணிக்கு, சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானாவில் இருந்து ஆஸ்ரமம் வரை, ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதியன்று, காலை, 10.30 மணிக்கு, புனித சின்னம் பிரதிஷ்டை செய்யும் விழா, ஆன்மிக சொற்பொழிவு, கூட்டு தியானம் உள்ளிட்டவை நடக்கிறது.பக்தர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்பாடுகளை, சேலம் அரவிந்தர் ஆஸ்ரம நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !