உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரைவீரன் கோவிலில் முப்பூஜை வழிபாடு

மதுரைவீரன் கோவிலில் முப்பூஜை வழிபாடு

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே, கோம்புபாளையத்தில் உள்ள மாசி பெரியண்ணன் மற்றும் மதுரை வீரசாமி கோவிலில், முப்பூஜை மற்றும் பொங்கல்விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மாசி பெரியண்ணன் மற்றும் மதுரை வீரசாமி கோவிலில் மூப்பூஜை நடந்தது. முப்பூஜையை முன்னிட்டு, மாசி பெரியண்ணன் மற்றும் மதுரைவீரசாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை மற்றும் நெல் குத்தல் மற்றும் பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !