ராமாஞ்சநேய கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி மகோற்சவம்
ADDED :3866 days ago
சென்னை: குரோம்பேட்டை, ராமாஞ்சநேய சுவாமி கோவிலில், மண்ட லாபிஷேக பூர்த்தி மகோற்சவ விழா நடைபெற உள்ளது. குரோம்பேட்டை, ராமாஞ்சநேய சுவாமி கோவிலில், கடந்த ஜன., 26ம் தேதி, குடமுழுக்கு விழா, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் முன்னிலையில் விமரிசையாக நடந்தது. அன்று முதல், 48 நாட்களாக, மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.மண்டலாபிஷேக பூர்த்தி மகோற்சவம், நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 7:00 மணி முதல், 11:00 மணி வரை, நவகலச திருமஞ்சனம் மற்றும் சர்வாரிஷ்ட சாந்தி ஹோமம், மகா சாந்தி ஹோமம் நடைபெற உள்ளன. காலை 11:15 மணிக்கு, மகா பூர்ணாஹுதி சாற்றுமுறை, நடக்க உள்ளது.