உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சொர்ண ஆகாஷ பைரவருக்கு சிறப்பு பூஜை; ஐந்து கால பூஜைகள் நடந்தன. திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பைரவருக்கு மஞ்சள், செவ்வரளி பூக்களால் அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். செயல் அலுவலர் கணேசன், அறங்காவலர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
* தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !