ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் சண்டியாகம்
கோத்தகிரி: கோத்தகிரி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சர்வ சக்தி மஹா சண்டியாக பெருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு, மங்கள இசையுடன் விக்னேஸ்வரர் பூஜை நடந்தது.தொடர்ந்து, சவுபாக்கிய திரவிய யாகம், வஸோத்தாரா, பூர்ணாஹுதி, தீபாராதனை, கடங்கள் புறப்பாடு,தீர்த்தாபிஷேகம் நடந்தது. 700 மந்திரங்களை கொண்டு, 13 அத்தியாயங்களாக சண்டிகா பரமேஸ்வரியை வணங்கி நடந்த சண்டியாகத்தை, பிரசன்ன ஆருட மகா வித்வான் கிருஷ்ணமூர்த்தி, சிவமணிகண்ட சாஸ்திரிகள், குணசேகர சாஸ்திரிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர். மாலை 3:00 மணிக்கு, கோவிலில் இருந்து, ஐயப்ப கோவில், காம்பாய் கடை, பேருந்து நிலையம், கடைவீதி வழியகாக, உற்சவ மூர்த்தி அலங்கார திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவிலில் பஜனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.