சாந்தி துர்கா பரமேஸ்வரி கோவிலில் பொங்கல் விழா!
ADDED :3829 days ago
குறிச்சி : குனியமுத்துார் சாந்தி துர்கா பரமேஸ்வரி கோவிலின், 18ம் ஆண்டு துவக்க பிரதிஷ்டை தினம் முன்னிட்டு, பொங்கல் விழா நேற்று நடந்தது. கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கோவிலின் பிரதிஷ்டை தின விழா, நேற்று அதிகாலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தீபாராதனை, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தன. 7:00 மணி முதல், இளநீர், பன்னீர், சந்தனம், பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட, எட்டு பொருட்களால், அபிஷேகம் நடந்தது.மாலை, 4:30 மணிக்கு, நான்காவது ஆண்டாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து எடுத்துச் சென்றனர். கோவில் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.