உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் கிணறு கண்டுபிடிப்பு!

கோதண்டராமர் கோவிலில் கிணறு கண்டுபிடிப்பு!

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில்  மேலும் ஒரு பழைய கிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி  சங்கராபரணி ஆற்றங்கரையில் தற்போது கோதண்டராமர் கோவில் என அழைக்கப்படும் 700 ஆண்டுகள் பழமையான பிரசன்ன வெங்கடேச பெரு மாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது முற்றிலும் அழிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக கோதண்டராமர் சி லையை நிறுவி வழிபட்டு வருகின்றனர். திருப்பணிகள் செய்ய பாலயம் செய்துள்ளனர். இக்கோவிலின் கருவறைக்குப் பின்புறம் வடமேற்கில் சில  ஆண்டுகளுக்கு முன் ஒரு கிணறு கண்டு பிடித்து துார் வாரினர். ராஜ கோபுரத்திற்கு தெற்கே இருபது அடி துாரத்தில் மேலும் ஒரு கிணறு இருப்பதை  தற்போது கண்டு பிடித்துள்ளனர்.சதுர வடிவில் செங்கற்களால் கட்டியிருந்த மண் திட்டை அறக்கட்டளை நிர்வாகி ரங்கராமானுஜம் மேற்பார்வையில் தொழிலாளர்கள் துார் வாரினர்.  இந்த திட்டு, வடக்கிலும், தெற்கிலும் மூன்று அடி அகலமும், கிழக்கிலும், மேற்கிலும் இரண்டே முக்கால் அடி அகலத்திலும் கிணறு இருப்பது தெரிந் தது. இந்தக் கிணற்றின் உள்ளே இறங்க சீரான இடைவெளியில் கல் பதித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த துார் வாரும் பணியில் 18 அடி  ஆழத்திற்கு துார்வாரி உள்ளனர். இதன் பிறகு துார் வார முடியாத வகையில் பாறைகள் உள்ளது. கிணற்றின் அடியில் மேற்கிலும், வடக்கிலும் சுர ங்கம் போன்ற அமைப்பு உள்ளது.  நீண்ட பலகை கற்களை அடுக்கி வைத்து, இந்த சுரங்கம் போன்ற அமைப்பு உருவாக்கி உள்ளனர். தற்போது இ ருண்டு போய் உள்ள இந்தப் பகுதியில் மேற்கொண்டு மண்ணை அள்ளுவது தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் மேற்கொண்டு  பணிகளை செய்யாமல் நிறுத்தி உள்ளனர். இந்த கிணற்றை, கிணறாக மட்டும் பயன்படுத்தாமல் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் ரகசிய  அறையாகவும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !