உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலை காக்க மனசில்லை.. சிவனுக்கு வந்த சோதனை!

கோயிலை காக்க மனசில்லை.. சிவனுக்கு வந்த சோதனை!

மேலுார் : மேலுாரில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சிவன் கோயில் கோபுரம் மற்றும் சுவாமி சிலைகள் சேதமடைந்தன. இங்கு பழமையான கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. முகூர்த்த நாட்களில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளான நிலையில் அறநிலையத்துறை பராமரிக்காததால் கருவறை உட்பட அனைத்து இடங்களிலும் மழைநீர் ஒழுகுகிறது. சிலைகள் சேதமடைந்து வருகின்றன.செடிகள் முளைத்து கோபுரத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் புகார் கொடுக்கவே, 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்கான கணக்கெடுப்பு நடந்ததோடு சரி. நேற்று முன்தினம் பெய்த மழையில் கோயில் முன் கோபுர கொடுங்கைகள் (ஆர்ச்) மற்றும் சிலைகள் விழுந்து நொறுங்கின. கோயில் முழுவதும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அறநிலையத்துறை உடனே திருப்பணிக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.கோயில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் கூறுகையில், கட்டட வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து, சேதத்திற்கு ஏற்ப மதிப்பீடு தயார்செய்து அரசுக்கு அனுப்பப்படும். அனுமதி பெற்று ஒரு மாதத்திற்குள் திருப்பணி துவங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !