சாரதாம்பாள் கோவில் பிரதிஷ்டை தின விழா!
திருப்பூர் : திருப்பூரில் உள்ள, சிருங்கேரி சங்கர மடம் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில்,28வது ஆண்டு பிரதிஷ்டை தினவிழா நேற்று நடைபெற்றது. சிருங்கேரி சங்கர மடம் சார்பில், திருப்பூர் அவிநாசி ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகில் ஸ்ரீசாரதாம்பாள் கோவில் உள்ளது. இதன் 28வது ஆண்டு பிரதிஷ்டை தினவிழா நேற்று நடைபெற்றது. காலை 8:30க்கு, 32 வகையான திரவியங்களுடன் சாரதாம்பாளுக்கு அபிஷேகம், தொடர்ந்து மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பொன்கிரீடம், ஜடை முடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு, அம்பாள் அருள்பாலித்தார்.வரும் 25ல், பாரதி தீர்த்த சுவாமிகளின் 65வது வர்தந்தி விழா நடைபெற உள்ளது. அன்று காலை 7:00க்கு நவக்ரஹ ஆயுஷ்ய ஹோமாதி, 9:00க்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதேபோல், ஸ்ரீசங்கர ஜெயந்தி உற்சவம், ஏப்., 23ல் நடக்கிறது. காலை 8:00க்கு வேத, உபநிஷ பாராயணம், காலை 10:00க்கு, மகா தீபாராதனை நடைபெறும்.