அக்ஷய திரிதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யாகம்!
காலடி: ஆதிசங்கரர், இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார். அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.இதன் அடிப்படையில் கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான ஏப்ரல் 21ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.கனகதாரா எந்திரம் ரூ. 351தங்க நெல்லிக்கனி ரூ. 12,001வெள்ளி நெல்லிக்கனி ரூ. 2001பிராமண போஜனம் ரூ. 3,001லெட்சுமி நாராயண அபிஷேகம் ரூ. 17,001பிராமண தட்சிணை ரூ. 1001அன்னதானம் ரூ. 6001கனகதாரா அர்ச்சனை ரூ. 101நெல்லிக்கனி பாரா ரூ. 51நெல்லிக்கனி சமர்ப்பணம் ரூ. 10தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321, 093495 53051