சிறியவர் யாருமில்லை!
ADDED :3876 days ago
ஒருசமயம் ராமானுஜர் ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதி மலைக்கு வந்தார். அவரை வரவேற்க மலையில் இருந்து, முதியவரான திருமலை நம்பி இறங்கி வந்து காத்திருந்தார். அவரைக் கண்டதும்,தள்ளாத வயதில் நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? உடல்நிலையைக் கருதி, சிறியவர் யாரையாவது அடிவாரத்துக்கு அனுப்பி இருக்கலாமே! என்றார் ராமானுஜர். என்னை விடச் சிறியவராக யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. அடியவரான உங்களை வரவேற்க நானே வந்து விட்டேன், என்றார் நம்பி. ராமானுஜரின் மனம் நெகிழ்ந்தது. பெரிய மகானாக இருந்தும், தன்னை சிறியவன் என சொன்ன அவரது பணிவைக் கண்டு வியந்து தழுவிக் கொண்டார்.