சபரிமலையில் சகஸ்ர கலச பூஜை!
ADDED :3876 days ago
சபரிமலை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை14ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலையில் தற்போது நடைபெற்று வரும் பங்குனி மாத பூஜையை ஒட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சகஸ்ரகலச பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக 24ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும்.