உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு தூக்க நேர்ச்சைக்கு1521 குழந்தைகள் முன்பதிவு!

கொல்லங்கோடு தூக்க நேர்ச்சைக்கு1521 குழந்தைகள் முன்பதிவு!

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 23-ம் தேதி வரை இந்த விழா தொடர்ந்து நடைபெறுகிறது. 23-ம் தேதி நடைபெறும் தூக்கத்திருவிழாவுக்காக குழந்தைகள் முன்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1521 குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 1439 குழந்தகளுக்கு தூக்கம் நடைபெற்றது. தூக்கத்துக்கு குழந்தைகள் தாங்கி பிடித்து தூக்கமரத்தில் தொங்கும் தூக்கக்காரர்களின் விரதம் நேற்று தொடங்கியது. 23ம் தேதி காலையில் தொடங்கும் தூக்கம் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்து நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !