சூசையப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி!
ADDED :3901 days ago
கடலூர்: கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. கடலூர், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை தேர்பவனி, திருப்பலி நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் புனித சூசையப்பர், குழந்தை ஏசு, தேவமாதா எழுந்தருளினர். தேர் செயின்ட் ஜோசப் பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.