ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ராமர் கோயிலில் சப்தாகம்!
மதுரை: மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள விளாச்சேரியில் 700 ஆண்டு பழமையான சீதா, லக்ஷ்மண சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் ராமபிரான், திருக்கல்யாண கோலத்தில் வலது புறம் சீதா தேவி அமர்ந்தும், இடதுபுறத்தில் லக்ஷ்மணர் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு உற்சவம் ஆரம்பமாகி உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு 20.3.15 முதல் 28.3.15 வரை காலையிலும், மாலையிலும் ஸ்ரீராமாயண நவாக மூல பாராயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டால் ஸ்ரீராமனின் அருள் கிடைப்பதுடன், குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 28.3.15 ஸ்ரீராமநவமியன்று காலை 7 மணி முதல் தொடர் ராமநாம ஜபம் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: டி. கண்ணன், செயலாளர், மொபைல்: 97888 54854