சிவசுப்ரமணிய சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா!
ADDED :3900 days ago
புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை, சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்தது. மண்டாலபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. காலை, விக்னேஸ்வர பூஜையுடன் பூஜைகள் துவங்கியது. பின், தசகலசாபிஷேகம், சிறப்பு ேஹாமம், தீபாராதனை யும், முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.