உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீற்றிருந்த பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

வீற்றிருந்த பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மாகறல் வீற்றிருந்த பெருமாள் கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடி மரத்திற்கு நேற்று, வைணவ முறைப்படி புனித நீர் தெளிக்கப்பட்டது.  காஞ்சிபுரம் அடுத்த, மாகறல் பகுதியில் பழமையான கமலவள்ளி தாயார் சமேத வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. 2 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட, புதிய கொடிமரம், கடந்த வாரம் கோவிலில் பிரதிஷ்டைசெய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில், கொடி மரத்திற்கு வைணவ முறைப்படி புனித நீர் தெளிக்கப்பட்டது.முன்னதாக, நேற்று முன்தினம் மாலை யாகம் துவங்கி, நேற்று காலை நிறைவு பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கொடி மரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேவியருடன் பெருமாள், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !