உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆக.2 முதல் ஒலி ஒளி காட்சி!

ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆக.2 முதல் ஒலி ஒளி காட்சி!

ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்து வரும் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்ட விருதுநகர் கலெக்டர் பாலாஜி, ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு பக்தர்களுக்கு தெரியும் வகையில், ஒலி ஒளி காட்சி அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். ஆக., 2 முதல் நடைமுறைபடுத்தி , வாரத்தில் சனிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு காண்பிக்க, அதிகாரிகளை கேட்டுகொண்டார். மேலும், கோயில் நுழைவாயிலில் உள்ள கோசாலையிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க, கோசாலையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !