நடராஜர் கோவில் பிரசாத கடை: ரூ.16 லட்சத்திற்கு ஏலம்
ADDED :5227 days ago
சிதம்பம்: சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம், 16 லட்சத்து 10 ஆயிரத்து 101 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து, பிரசாத கடை வைப்பதற்கான ஏலம், கடந்த 2009ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதலில், 7 லட்சத்து 56 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு, 11 லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், 2012 ஜூன் வரை, பிரசாத கடை வைப்பதற்கான ஏலம், உதவி ஆணையர் ஜெகன்நாதன் முன்னிலையில் நேற்று நடந்தது.மூன்று பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்சமாக ஏலம் கேட்டிருந்த, கும்பகோணம் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த செல்வராஜிக்கு, 16 லட்சத்து 10 ஆயிரத்து 101 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.