நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா!
திருவாரூர்: நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனைச்செலுத்தினர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு விழா நடந்து வருகிறது. தற்போது 21ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதனை முன் னிட்டு காலை 10 மணிக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து பக்தர்கள் நான்கு முக் கிய வீதிகளில் வலம் வந்து, அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதன் பின் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.மாலையில் நடந்த பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நீடாமங்கலம் தமிழ்இளைஞர் பக்தர் கழகத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனர்.