கோதண்டராமர் சுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு!
ADDED :3849 days ago
சிதம்பரம்: சிதம்பரம், மேல வீதி கோதண்டராமர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். சிதம்பரம் மேல வீதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி ÷ காதண்டராமர் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, திருப்பாவை சேவை சாத்துமுறைகள் நடக்கிறது. 3ம் நாள் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் கோதண்டராமர் புறப்பாடு செய்து கமலீ ஸ்வரன் கோவில் தெரு கோவிந்தராஜா திருமண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பலிஜவாரு சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை கோதண்டராமர் சேஷ வாகனத்தில் புறப்பாடு செய்து வீதியுலா நடந்தது.