உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பவானி: பவானி, அம்மாபேட்டை, சக்தி நகரில் புதிதாக கட்டப்பட்ட சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த, 21ம் தேதி காலை, 7 மணியளவில் காவிரி ஆற்றுக்கு சென்று, அப்பகுதி பொது மக்களால் புனித நீர் கொண்டு வரப்பட்டது. கோவிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில், வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கி, பிரவேச பலி,யாக வேள்விகள் நடந்தது. கருவறையில் சக்தி விநாயகர் திருவுருவ சிலை நிலை நாட்டப்பட்டது.கடந்த, 22ம் தேதி விநாயகர் பூஜை, வேதிக பூஜை, யாகவேள்வி, நாடி சந்தானம் நடந்தது. நேற்று மேளவாத்தியங்கள் முழங்க கலசங்கள், கோவிலை வலம் வந்து, புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை, பாஸ்கரா ரகுபதிசிவம் மற்றும் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !