கருணைக்கடல் ராமர்!
ADDED :4249 days ago
ராவணனின் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோர் ராமனோடு போரிட்டு இறந்தனர். பிறகு ராவணனே போரிட வந்தான். தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தியும் கூட தோல்வி அடைந்தான். ராமர், இன்று போய் நாளை வா என்று இரக்கமுடன் அனுப்பினார். கடைசி நேரத்திலாவது அவன் திருந்த வேண்டும் என்பதே ராமரின் எதிர்பார்ப்பு. அந்தளவுக் குகருணைக்கடலாக விளங்கினார் ராமர்.