சிதம்பரபுரம் கோயிலில் கொடியேற்றம்
ADDED :5226 days ago
களக்காடு : களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் 82வது ஆனித் தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் சுவாமி தொட்டில் வாகனத்தில் வீதியுலா சென்றார். விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா செல்லும் வைபவம் நடக்கிறது. எட்டாம் திருநாளான ஜூலை 1ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் திருநாளான ஜூலை 4ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேரோட்ட திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.