மயிலியம்மன் கோவிலில் ஊரணி உற்சவம்!
ADDED :4219 days ago
மயிலம்: மயிலியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மயிலத்திலுள்ள மயிலியம்மன் கோவில் மாசி திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மயிலியம்மன் உற்சவர் சிலையை பக்தர்கள் எடுத்து வந்தனர். தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடுகள் நடந்தது. உற்சவர் வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இரவு 7 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது . இரவு 9 மணிக்கு அலங்கரித்த தேரில் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.