உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை!

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்  மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அங்காள பர÷ மஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை மற்றும் தேர் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங் கியது. சக்தி அழைத்தல்  நிகழ்ச்சி, தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா,  ஊரணி பொங்கல்,  கோட்டை இடித்தல் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு மய õனத்தில் காடு வளைத்த காட்டேரி ஊர் சுற்றி வருதல், பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.  ஊர்வலமாக சென்று  கோமுகி  ஆற்று நதிக்கரையில் மயானக் கொள்ளை நடந்தது. இன்று காளிகோட்டை இடித்தல் மற்றும் தேர்த் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !