வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4207 days ago
காரைக்கால்: மேலகாசாகுடி வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாக்குடியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்கத்தையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வதரதராஜ்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு சம்பத்ரா அபிஷேக ஹோமமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன், விழா உபயதாரர் இளங்கோவன், வேதஸ்தான தனி அதிகாரி, விழா குழுவினர் மற்றும் மேலகாசாகுடி கிராம வாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.