உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காரைக்கால்: காரைக்காலில் நூதன ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில்  உள்ள பச்சூர் பகுதியில் ரூ 25 லட்சத்திற்கு புதிதாக ஐயப்பன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பணிகள் நேற்று நடைபெற்றது. ஜயப்பன் கோவில் 3600  சதுர அடியில் கேரளமாநில சபரிமலை ஐயப்பன் கோவில் வடிவமைப்பில் திருப்பணி செய்யப்பட்டு ஸ்ரீ கன்னிமூலை கணபதி, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீ  மஞ்சமாதா ஆகிய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9.30.மணி முதல் 11 மணிக்குள் மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம்  நடைபெறுகிறது. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஸ்ரீ சபரிமலை தந்திரி கண்டரு மஹேஸ்வரரு, அவர்களின் குமாரர் கண்டரு மோகனரூ, பேரன்  கண்டரு மகேஷ் மோகனரு ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கோவிலில் முலவர் மற்றும் உற்சவர் ஐயப்பன் சிலைகள் கேரளா மாநிலம்  சபரிமலையிலிருந்து புதிதாக செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பணி குழு, செயற்குழு  மற்றும் உறுப்பினர்கள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் அறங்கட்டளை சிறப்பாக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !