கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3956 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. காலை 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், காலை 8:30 மணிக்கு கொடிச்சீலை வீதியுலா நடந்தது. காலை 10:00 மணிக்கு கொடியேற்றி, நவசந்தி பூஜை நடந்தது. இரவு ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்ற நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனமும் நடந்தது. தினமும் சுவாமி வீதியுலா, 29ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனம், 31ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, ஏப்.2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 3ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி, 5ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா முடிகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.