கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3851 days ago
புதுச்சேரி: கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் விரிவு சந்திப்பில் உள்ள கற்பக விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, 18 அடி உயரத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை மற்றும் 16 அடி உயர மலேசிய முருகர் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா, கடந்த 23ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜை, ஹோமங்கள் நடத்தப்பட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவில், முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., பொதுச்செயலாளர் சிவக்கொழுந்து, ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.