கோதண்டராமசுவாமி கோயில் திருக்கல்யாணம்!
ADDED :3849 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில் பிரம்மோற்சவவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் சுவாமி வீதி உலா, பல்வேறு வாகனங்களில் நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று காலை 11 மணிக்கு ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. இரவு சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.