பரமக்குடி தர்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3849 days ago
பரமக்குடி : பரமக்குடி பாரதிநகர் தர்மசாஸ்தா கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த மார்ச் 22 ல் விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை 4 மணிக்கு முதல்கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு நடந்த 6 ம் கால யாகபூஜைக்கு பிறகு, புனித தீர்த்தக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடாகி, காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தர்மசாஸ்தா, விநாயகர், பாலமுருகன், அனுமான், கருப்பணசாமி, நவக்கிரகம், மகாலட்சுமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும்அபிஷேகம் நடந்தது. ஆலய அர்ச்சகர் சிதம்பரகுருக்கள், திருவாடானை சுவர்ண-சந்திரசேகர குருக்கள், நாட்டரசன்கோட்டை கண்ணன் சிவாச்சாரியர் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை பாரதிநகர் தர்மசாஸ்தா கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.