ஒத்தாண்டீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :3964 days ago
திருமழிசை: திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருமழிசையில் உள்ளது குளிர்ந்த நாயகி உடனாகிய ஒத்தாண்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று முன்தினம் விநாயகர் உற்சவத்துடன் துவங்கியது. முன்னதாக, கடந்த 22ம் தேதி, பாலசம்மந்த விநாயகர் வழிபாடும், கிராம தேவதைகளான எல்லையம்மன், அருவாம்பிகையம்மனுக்கு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இதையடுத்து, நேற்று காலை 10:15 மணிக்கு கொடியேற்றமும்; மாலை, மங்களகிரி உற்சவமும் நடந்தன. இன்று காலை, சூரிய விருத்தமும்; மாலை, சந்திர விருத்தமும் நடைபெறும்.