பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
ADDED :3847 days ago
திருவள்ளூர்: விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, வரும் 28ம் தேதி பாலாபிஷேகம் நடைபெறுகிறது.திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி, வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அன்று காலை 8:30 மணி முதல், பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெறுகிறது.