பட்டாபிராமர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3847 days ago
நகரி: பட்டாபிராமர் கோவிலில் நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில் பட்டாபிராமர் கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு, புதிதாக கட்டப்பட்ட கோவில் கோபுரத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.