எல்லைப்பிடாரி அம்மன் கோவில் தீ மிதி விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :3961 days ago
சேலம்: சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த தீ மிதி விழாவில், பக்தர்கள் திரளாக குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம், எல்லைப்பிடாரி அம்மன்கோவில் பண்டிகை மார்ச், 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் திரளாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்குதல், நேற்று மாலையில் நடந்தது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அம்மனின் விக்ரகத்துடன் பூசாரி முதல் ஆளாக இறங்கியதை தொடர்ந்து திரளான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று மாலையில் வண்டி வேடிக்கையும், நாளை சத்தாபரணம் நடக்கிறது.