அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா துவக்கம்
ADDED :3904 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. அரியூர் வேதாகம விற்பன்னர் முத்துக்குமாரசிவம் தலைமையில் சிறப்பு பூஜைகளை செய்தனர்.ஏப்ரல், 2ம் தேதி வரை சூரிய வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், பூந்தேர், குதிரை வாகனம், திருத்தேர் ஆகியவற்றில் ஸ்வாமி வீதியுலா நடைபெறும். ஏப்ரல், 3ம் தேதி பங்குனி உத்திர தினத்தில் காலை, 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பட்டு வீதியுலா வந்து அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலிலும் தீர்த்தவாரி நடக்கிறது. இரவில், காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடக்கிறது.