கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி உற்சவம்!
நகரி: நகரி காமாட்சி சமேத கரகண்டேஸ்வரர் சுவாமி கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மூலவருக்கு கரகண்டேஸ்வர சுவாமி, காமாட்சி தாயார், விநாயகர், சுப்ரமணிய சுவாமி, சூரியன், நவக்கிரகம் மற்றும் அய்யப்ப சுவாமி ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று, சூரிய பிரபையில் உற்சவர் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி சந்திர பிரபை; 29ம் தேதி அதிகார நந்தி வாகனம்; 30ம் தேதி சேஷ வாகனம்; 31ம் தேதி ரிஷப வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏப்., 1ம் தேதி கஜ வாகனம்; 2ம் தேதி ரத உற்சவம்; 3ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி; 4ம் தேதி அஷ்வ வாகனம், வசந்த உற்சவம், சிவகாமி சுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வீதியுலா நடைபெறும். வரும் 5ம் தேதி ராவணேஸ்வர வாகனம்; இரவு, சிறப்பு பூஜைகளுக்கு பின், கொடி இறக்கம் நடைபெறுகிறது.