பழநிகோயில் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED :3848 days ago
பழநி: பங்குனி உத்திர விழாவைமுன்னிட்டு பழநிகோயில் கிரிவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கொடுமுடி தீர்த்தக் காவடிக்கு புகழ்பெற்ற பழநி பங்குனி உத்திர விழா மார்ச் 28ல் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,6வரை 10 நாட்கள் நடைபெறும். ஏப்.,2ல் வெள்ளி ரதமும், ஏப்.,3ல் பங்குனி உத்திர தேரோட்டமும் நடக்கிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் பாதயாத்திரையாக தற்போதே வருகின்றனர். பழநிகோயில் இணைஆணையர் ராஜமாணிக்கம் தலைமையில் மலைக்கோயில் கிரிவீதி வின்ச் ஸ்டேஷன், பாதவிநாயகர்கோயில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக தள்ளு வண்டிகள், பழம், தேங்காய்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தேரோட்டத்திற்கு இடையூறான மரக்கிளைகளும் அகற்றப்பட்டன.