பாகூர் கோவிலில் ராமநவமி உற்சவம்
ADDED :4182 days ago
பாகூர்: பாகூர் சீதா சமேத கோதண்டராமர் சுவாமி கோவிலில், 29ம் ஆண்டு ராமநவமி உற்சவம் நாளை (28ம் தேதி) துவங்குகிறது. பாகூர் அக்ரஹார வீதியில், சீதா சமேத கோதண்டராமர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 29ம் ஆண்டு ராம நவமி உற்சவம் நாளை (28ம் தேதி) ராமர் ஜனனத்துடன் துவங்குகிறது. தினமும் காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஏப்., 2ம் தேதி மாலை 7:00 மணிக்கு, சீதா ராமர் திருக்கல்யாணம், 6ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.