பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :3904 days ago
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, திருமண்கரடு பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி பேரூராட்சி, 15வது வார்டு, காந்திநகர் திருமண்கரடில், பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது. கோவிலின், ராஜகோபுரம் புனரமைக்கும் பணி மேற்கொண்டு, கும்பாபிஷேக விழா நடந்தது.சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று முன்தினம், காலை 9 மணியளவில், கும்பாபிஷேகம் நடந்தது. பாலதண்டாயுதபாணி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.