உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று காலை, குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவா - விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. மேலும், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வர சுவாமி கோவில், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை அருள்தரும் ஆதிசோமேஸ்வரி கோவிலில் உள்ள தண்டியடிகள் நாயனாருக்கு, குரு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !