வத்தலக்குண்டில் தீர்த்தக்காவடி பாதயாத்திரை!
ADDED :3845 days ago
வத்தலக்குண்டு : விராலிப்பட்டியில் இருந்து பழநிக்கு பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். விராலிப்பட்டியில் இருந்து பக்தர்கள் பல ஆண்டுகளாக பழநிக்கு பங்குனி உத்தரத்திற்காக பாதயாத்திரை சென்று வருகின்றனர். பழநி செல்வதற்கு முன்பாக கொடுமுடிக்குச் சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு வருவர். பின்னர் கிராமத்தில் விரதமிருக்கும் அனைவரும் ஒன்று சேர்வர். உத்திரத்தன்று முருகனை தரிசிக்க ராமசாமி பூசாரி தலைமையில் பழநி செல்கின்றனர். இது குறித்து பூசாரி கூறுகையில்,""முன்னோர்கள் கடைபிடித்த பழக்கம் என்பதால், நாங்களும் அவ்வழியைப் பின்பற்றி வருகிறோம் என்றார்.