சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராம நவமி விழா!
ADDED :3849 days ago
வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே கல்லமநாயக்கர்பட்டி ஸ்ரீ சோலைமலை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராம நவமி விழா நடந்தது. முதல்நாள் திருமஞ்சனம், சந்தனக்காப்பு, உஞ்சவவிருத்தி, இரண்டாம் நாள் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் நடந்தது. மூன்றாம் நாள் இரவு ஸ்ரீ தேவி மற்றும் பூதேவிசமேத ஸ்ரீ சோலைமலை சுந்தரராஜப் பெருமாள் ரதம் வீதி உலா வந்தது. நான்காம் நாள் இரவு ஸ்ரீ ராமர்மற்றும் சீதாதேவியுடன் ரதம் வீதி உலா வந்தது. ஐந்தாம்நாள் மாலை சீதா கல்யாண உற்சவத்தை அனந்தசயன பட்டர் மற்றும் கோவிந்தராஜ பட்டர் குழுவினர் நடத்தினர். ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஜில் சோப் உரிமையாளர் சோலைசாமி கலந்து கொண்டனர்.