காரியசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா!
ADDED :3942 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் காரியசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் உள்ள காரியசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். ஆலை பொது மேலாளர் பாலாஜி, கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.