உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் கோவிலில் தேர் திருப்பணி: அறநிலைய உதவி ஆணையர் பார்வை!

சிங்கவரம் கோவிலில் தேர் திருப்பணி: அறநிலைய உதவி ஆணையர் பார்வை!

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் தேர் திருப்பணியை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பார்வையிட்டார்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா சிங்கவரம் மலை மீதுள்ள, பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் தேர் 80 ஆண்டுகளுக்கு முன்பு சேதமானது.  புதிய தேர் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை மூலம் 11.50 லட்சம் ரூபாய், கிராம நிதியாக ரூ.8 லட்சம்,  பொதுமக்கள் நன்கொடையுடன்  சேர்த்து 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 அடி உயரத்தில் தேர் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, இந்து  சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். வரும் மே 22ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடக்க இருப்பதால், தே÷ ராட்டம் நடக்க உள்ள மாட வீதிகளையும் அவர் பார்வையிட்டார். இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர் மணி, மேல்மலையனுார் கோவில்  மேலாளர் மணி, ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !